தியேட்டரில் 50 நாட்களைக் கடந்த சிறை படம்… கொண்டாட்டத்தில் படக்குழு
TV9 Tamil News February 12, 2026 06:48 PM

தமிழ் சினிமாவில் கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் சிறை. க்ரைம் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரி இயக்கி இருந்த நிலையில் திரைக்கதையை இயக்குநர் தமிழ் உடன் இணைந்து சுரேஷ் ராஜ்குமாரி எழுதி இருந்தார். இந்தப் படத்திற்கான கதையை இயக்குநர் தமிழ் சுறுக்கமாக சொல்ல அதனை இயக்குநர் சுரேஷ் ராஜ்குமாரி அழகாக விரிவாக்கினார் என்று தமிழ் பல பேட்டிகளில் தெரிவித்து இருந்தார். மேலும் படத்திற்காக உண்மையான கதையில் இருந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் எல்.கே.அக்‌ஷய குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். இவர் முன்னதாக பலப் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து இருந்தாலும் இந்தப் படத்தில் இவரது கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். தொடர்ந்து இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தியேட்டரில் 50 நாட்களைக் கடந்த சிறை படம்:

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. ஓடிடியில் வெளியான பிறகும் சிறை படம் திரையரங்குகளில் மக்களின் வரவேற்பைப் பெற தவறவில்லை. அதன் காரணமாக படம் வெளியாகி இன்றுடன் 50- நாட்களைக் கடந்துள்ளதைப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு கொண்டாடி வருகின்றது.

Also Read… வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் காதலர் தினம் படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

சிறை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

A story that stayed. 50 unforgettable days 🎥✨#50DaysOfSirai

Starring @iamVikramPrabhu @lk_akshaykumar @iamanishma @t_ananda98#SureshRajakumari @madheshmanickam @justin_tunes @philoedit @directortamil77 @SRIMAN161725 @varshu03@PC_stunts @Synccinema @_gbalaji… pic.twitter.com/pW4rifv9Nh

— Seven Screen Studio (@7screenstudio)

Also Read… Shiva Rajkumar: ஜெயிலர் 2 படம் குறித்து சூப்பர் அப்டேட் சொன்ன சிவராஜ்குமார்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.