2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெருவெற்றி பெற்றுத் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற இலக்கோடு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழு’ அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேர்தல் பணிகளைச் சிறப்பாக வழிநடத்திட இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவின் முக்கியப் பொறுப்பாளர்கள்:
தலைவர்: நயினார் நாகேந்திரன் (பாஜக மாநிலத் தலைவர்).
அமைப்பாளர்: பொன். இராதாகிருஷ்ணன் (தேசிய செயற்குழு உறுப்பினர்).
இணை அமைப்பாளர்கள்:
எஸ்.ஆர். சேகர் (மாநிலப் பொருளாளர்), ஆர்.என். ஜெயப்பிரகாஷ் (மாநிலத் துணைத் தலைவர்). மா. வெங்கடேசன் (மாநிலத் துணைத் தலைவர்). மாலா செல்வகுமார் (மாநிலப் பொதுச் செயலாளர், ஓபிசி அணி), எஸ்.ஆர். ரமப்பிரியன் (கட்சி உறுப்பினர்).
தேர்தல் வியூகம்:
தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தலைவர்களும் தொண்டர்களும் தற்போது முழுமூச்சாகக் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களைப் போலவே இந்தத் தேர்தலிலும் பணிகளைச் செம்மைப்படுத்தவும், தேர்தல் யுக்திகளைத் துல்லியமாக வகுக்கவும் இந்தக் குழு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.