அடையாளம் தெரியாதவர் கல்லால் அடித்து மர்ம நபர் கொலை!
Dinamaalai February 13, 2026 12:48 AM

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் அடையாளம் தெரியாத நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்துடன் ஒருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

முகம் சிதைந்த நிலையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்திருந்தது தெரியவந்தது. மர்ம நபர்கள் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் இருந்து சில முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.