“ஈரான் தாக்குதலின் போது பெருந்தவறு!”… அமெரிக்காவின் 3 F-15 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்… உலகையே உலுக்கும் தகவல்…!!!
SeithiSolai Tamil March 03, 2026 12:48 AM

ஈரான் மீதான தாக்குதல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், குவைத் நாட்டின் வான் பாதுகாப்புப் படை அமெரிக்காவின் மூன்று F-15 போர் விமானங்களை தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானிய இலக்குகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அமெரிக்கப் போர் விமானங்களை, ஈரானின் தாக்குதல் எனத் தவறாகக் கருதி குவைத் பாதுகாப்புப் படை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இந்தத் திடீர் சம்பவத்தால் அமெரிக்கா – குவைத் உறவில் பெரும் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், வளைகுடா நாடுகள் போர் பதற்றத்தின் உச்சத்திற்குச் சென்றுள்ளதாகவும் சர்வதேச அரசியல் வட்டாரங்கள் அதிர்ச்சியுடன் உற்றுநோக்கி வருகின்றன. தவறுதலாக நடந்த இந்தத் தாக்குதலில் உயிர்சேதம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.