Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
பேச்சி ஆவுடையப்பன் March 03, 2026 10:14 AM

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வடமாநில தொழிலாளி உள்ளிட்ட இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெறும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது இந்த கிராமத்தில் இயங்கி வரும் ஒரு டீக்கடை முன்பு நேற்று இரவு சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது 3 இருசக்கர வாகனத்தில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் திடீரென டீக்கடை முன்பு வந்தது. 

அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை டீக்கடை முன்பு வீசியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உயிர் பயத்தில் தப்பியோடினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று தங்களிடம் இருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்தனர்.  இதில் வட மாநில தொழிலாளி ஒருவரும், ஜான் மார்க் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பெரும்பத்தைச் சேர்ந்த நெல்சன்,  பிரபாகரன் மற்றும் ராமசாமி  வீரங்குளத்தைச் சேர்ந் கணேசன் மற்றும் புளியங்குளத்தைச் சேர்ந்த சஸ்கியம்மார் ஆகியோர் காயமடைந்தனர்

மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களின் அலறல்  சத்தம் கேட்டு அப்பகுதிக்கு ஓடி வந்த அக்கம் பக்கத்து மக்கள் 5 பேரையும்  மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக போலீசார் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்றனர். அங்கு உயிரிழந்தவர்கள் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அப்பகுதி மக்கள் இந்த இரட்டை கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போலீசார் அந்த வாகனமும் கல்வீசி சேதப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பதற்றமான சூழலை தவிர்க்கும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார் தலைமையில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் அடிக்கடி இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே சாதிய ரீதியிலான தாக்குதல் வருகிறது. 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

2 பேர் கொலை, 4 பேர் படுகாயம் என்ற இந்த கொடூர தாக்குதல் சாதிய ரீதியில் நடைபெற்றதா அல்லது வேறு எதுவும் சம்பவம் காரணமாக நிகழ்ந்ததா என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் முகமூடி அணிந்திருந்ததாக காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.