நாடே எதிர்பார்த்த சாத்தான்குளம் வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு..!
Top Tamil News March 03, 2026 10:48 AM

2020ம் ஆண்டு சாத்தான்குளத்தில் உள்ள வியாபாரி ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தனர். 

போலீசார் கொடூரமாக தாக்கியதன் காரணமாக இருவரும் உயிரிழந்தனர் என்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணையில் இருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கில்அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பால கிருஷ்ணன், ராகு கணேஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். 

சிபிஐ தரப்பில் 105 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சுமார் 400 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.மதுரை முதலாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில இந்த வழக்சின் விசாரணை நடைபெற்று வந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் விஜயன் தமது தரப்பு வாதத்தை கோர்ட்டில் முன் வைத்தார். அதேபோல குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் இருந்தும் வாதங்கள் மூன வைக்கப்பட்டன.

அனைத்துத் தரப்பு விசாரணைகள், வாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், வழக்கின் தீர்ப்பை மார்ச். 23ம் தேதி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.