ஈரான் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மினாப் ஆரம்பப் பள்ளி மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் பலியான 165 பள்ளி மாணவிகளின் உடல்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கண்ணீர் மல்க அடக்கம் செய்யப்பட்டன.
ஒரே பள்ளியில் பயின்று விளையாடி மகிழ்ந்த இந்தச் சிறுமிகள் அனைவரும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் தோண்டப்பட்ட வரிசையான குழிகளில் அமைதியாக உறங்கும் காட்சி காண்போரை நிலைகுலையச் செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உறவினர் மேரி ட்ரம்ப் மற்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
பாதுகாப்பளிப்பதாகக் கூறிவிட்டு இது போன்ற கொடூரமான தாக்குதல்களை நிகழ்த்துவது நியாயமா என்ற கேள்வி உலகெங்கும் எழுந்துள்ள நிலையில் இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எழுநூற்று எண்பத்தேழாக உயர்ந்துள்ளது.