”இது வாக்குறுதி இல்ல…. மக்களுக்கான என் Vision” தளபதியின் 'வெற்றித் திட்டம்'….!!
SeithiSolai Tamil March 04, 2026 07:48 PM

விஜய் தஞ்சாவூரில் பேசியபோது மக்களுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் விஷன் என பட்டியலிட்டவை

பயிர்க்கடன் ரத்து: 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகளுக்கு 100% கடன் ரத்து! 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% வரை ரத்து செய்யப்படும்.

உரப் புரட்சி: டெல்டா மாவட்டங்களில் இனி உரத் தட்டுப்பாடோ, பதுக்கலோ இருக்காது. நேரடி கண்காணிப்பில் சரியான விலையில் உரங்கள் கிடைக்கும்.

ஊழலற்ற கொள்முதல்: நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை தூக்க ‘ஒரு பைசா கமிஷன்’ கூட வாங்க முடியாதபடி செக் வைக்கப்படும்!

நவீன சேமிப்பு: மழையில் நனைந்து நெல் வீணாவதைத் தடுக்க, நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

விவசாயிகள் பாதுகாப்பு: ஒன்றிய அரசின் நெருக்கடி இருந்தாலும், விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறான எந்தவொரு திட்டத்தையும் TVK அரசு தமிழகத்தில் அனுமதிக்காது!

இலவச உயர்கல்வி: 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு Engineering, MBBS உள்ளிட்ட அனைத்து உயர் படிப்புகளுக்கும் முழு செலவையும் அரசே ஏற்கும்!

வேலைவாய்ப்பு உறுதி: அரசு மற்றும் தனியார் துறைகளில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு 100% உறுதி செய்யப்படும்.

நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை: முதலீடுகள் பற்றி வெறும் வாயால் விளம்பரம் செய்யாமல், உண்மையான நிலவரத்தை ‘வெள்ளை அறிக்கையாக’ வெளியிடுவோம்!

ஸ்மார்ட் ரேஷன்: கூட்டத்தைத் தவிர்க்க 500 கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை! அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருட்களும் சுகாதாரமான ‘பாக்கெட்’ முறையில் விநியோகிக்கப்படும்.

முறைப்படுத்தப்பட்ட எடையாளர்கள்: பெண்களுக்குப் பெண், ஆண்களுக்கு ஆண் எனப் புதிய வேலைவாய்ப்புடன் கூடிய எடையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மீனவர் பாதுகாப்பு: எல்லையில் மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க ஒன்றிய அரசுக்குத் தகுந்த அழுத்தம் கொடுக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

லஞ்சமில்லா ஆட்சி: லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகமே எங்களின் முதல் முன்னுரிமை!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.