'புரட்சி அதிமுக' என்ற புதிய கட்சியை தொடங்கினார் புகழேந்தி
Top Tamil News March 04, 2026 11:48 PM

அதிமுகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி, 'புரட்சி அதிமுக' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் நிர்வாகி பெங்களூரு புகழேந்தி, 'புரட்சி அதிமுக' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் சசிகலா ஆதரவாளராகவும், பின்னர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் விஜய், மல்லை சத்யா, பண்ருட்டி ராமச்சந்திரனை தொடர்ந்து புகழேந்தி தலைமையில் மற்றொரு புதிய கட்சி உதயமாகியுள்ளது.

இதுதொடர்பாக புகழேந்தி கூறுகையில், “நானும் கட்சி தொடங்கிவிட்டேன் என சொல்லாமல் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளேன். புரட்சி என்பது எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் குறிக்கும். தேர்தலுக்கு தனி சின்னம் கோரியுள்ளேன். சட்டமன்ற தேர்தலுக்கு பின் எடப்பாடி பழனிசாமி காணாமல்ப் போவார்” என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.