மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், 253 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி.
இங்கிலாந்து வீரர்கள் கடைசி ஓவர் வரை போராடினாலும், பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் சூர்யா, “பும்ரா எவ்வளவு திறமையானவர் என்பது உலகிற்கே தெரியும்; இக்கட்டான நேரத்தில் மீண்டும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு, ஆட்டத்தை இங்கிலாந்திடமிருந்து தட்டிப் பறித்தார். இது ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சு செயல்பாடு” என நெகிழ்ந்தார்.
மேலும், அதிரடியாக 89 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனைப் பாராட்டிய சூர்யா, “சஞ்சு களத்திற்குச் சென்றவுடனேயே என்ன செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். விக்கெட்டுகள் விழுந்தாலும் கவலைப்படாமல் அதிரடியாக ஆடினார்.
கடந்த ஓராண்டாக அவர் மேற்கொண்ட கடின உழைப்பிற்கு இன்று பலன் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார். பும்ராவின் கட்டுப்பாடான பந்துவீச்சும், சஞ்சுவின் மிரட்டலான பேட்டிங்கும் தான் இந்தியாவை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது.