இந்தியர்கள் மனைவி, மகள் பெயரில் சொத்துக்கள் வாங்குவது ஏன்? இவ்வளவு லாபமா?
Webdunia Tamil March 07, 2026 07:48 PM

இந்தியாவில் பெண்கள் தங்கள் பெயரில் சொத்து வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் அரசு மற்றும் வங்கிகள் பல்வேறு நிதிச்சலுகைகளை வழங்கி வருகின்றன. இதில் மிக முக்கியமானது முத்திரைத்தாள் கட்டண சலுகை ஆகும்.

டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில், ஆண்களை விட பெண்களுக்கு 1% முதல் 2% வரை குறைவான முத்திரைத்தாள் கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இது சொத்து வாங்கும் ஆரம்பக்கட்ட செலவை கணிசமாகக் குறைக்கிறது.

மேலும், பல வங்கிகள் பெண் விண்ணப்பதாரர்களுக்கு வீட்டுக்கடன் வட்டியில் 0.05% முதல் 0.10% வரை தள்ளுபடி வழங்குகின்றன. நீண்ட கால கடன்களில் இது பெரும் சேமிப்பை தரும். எனவே ஆண்கள் தங்கள் மனைவி, மகள் பெயரில் சொத்துக்களை அதிகம் வாங்கிவருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன..

வருமான வரிச்சட்டத்தின் கீழ் அசல் மற்றும் வட்டித்தொகையில் வரி விலக்கு பெறுவதுடன், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களில் பெண்களின் பெயரில் சொத்து இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக தங்கத்தில் முதலீடு செய்த பெண்கள், தற்போது இத்தகைய சலுகைகளால் ரியல் எஸ்டேட் பக்கம் திரும்பியுள்ளனர். 2024-ல் 20 சதவீதமாக இருந்த பெண் நில உரிமையாளர்களின் எண்ணிக்கை தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.