தெரியாம குண்டு போட்டுட்டோம்.. மன்னிச்சுக்கோங்க.. அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்..!
Webdunia Tamil March 07, 2026 07:48 PM

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில் அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்கம் ஈரானுக்கு இல்லை என்று கூறிய அவர், ஈரான் மீதான தாக்குதல்கள் அண்டை நாடுகளிலிருந்து தொடங்காதவரை, ஏவுகணை வீச்சுகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அறிவித்துள்ளார். அதேவேளையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான நேரடி மோதல் தீவிரமடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் "நிபந்தனையற்ற சரணடைதலை" அறிவிக்க வேண்டும் என்று பிடிவாதமாக வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பெசெஷ்கியான், சரணடையும் கனவு நிறைவேறாது என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேலியத் தாக்குதலில் 1,300-க்கும் மேற்பட்ட ஈரானிய பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் 3 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இ

ந்த மோதலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல ஆண்டுகளில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளதுடன், உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்வுகளைச் சந்தித்து வருகிறது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.