விஜய் அதிரடி அறிவிப்பு! குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500, இலவச சிலிண்டர்கள் & மேலும் பல!
கிஷோர் March 07, 2026 08:14 PM

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்று, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், குடும்பங்களின் நலனுக்காகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் அவர் முன்வைத்த முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:

1. மதிப்பு மிகு மகளிர் திட்டம்

அரசு வழங்கும் திட்டங்களை 'இலவச உதவி' என்று ஏளனம் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த விஜய், மக்களின் பணத்தை மக்களுக்குத் திருப்பித் தருவதே அரசின் கடமை என்று குறிப்பிட்டார். இதன் ஒரு பகுதியாக: 60 வயது நிரம்பிய அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்படும்.

2. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்

குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில், சமையல் எரிவாயு பயன்பாட்டிற்காக:

 * ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.

3. அண்ணன் சீர் திட்டம்

பெண்களின் திருமண வாழ்க்கை எவ்வித கடன் சுமையுமின்றி மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்ற நோக்கில், தாய் வீட்டின் சார்பாக அண்ணனாக நின்று இந்த சீர்வரிசைகளை வழங்குவதாக அறிவித்தார்: ஒவ்வொரு தங்கைக்கும் திருமணத்தின் போது ஒரு பவுன் தங்கம் மற்றும் உயர்தரமான பட்டுச் சேலை வழங்கப்படும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.