திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டில் பங்கேற்க சென்ற தொண்டர்கள் பயணம் செய்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள திருச்சி நோக்கி பயணம் செய்து வருகின்றனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தாலுகாவிலிருந்து தொண்டர்கள் வேனில் புறப்பட்டு சென்றனர்.

அவர்கள் சென்ற வேன் தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலை அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேன் நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வேனில் இருந்த 20க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பலத்த காயமடைந்தனர்.

விபத்தை கண்ட அருகிலிருந்தவர்கள் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுக்கா போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!