கூரையை பிய்த்து கொண்டு வந்த அதிர்ஷ்டம்.. டாக்சி ஓட்டுனருக்கு கிடைத்த 10 கோடி லாட்டரி பரிசு..!
Webdunia Tamil March 09, 2026 08:48 PM

ஷார்ஜாவில் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் விபீஷ் என்பவருக்கு, அவரது 15 ஆண்டுகால காத்திருப்பிற்கு பலனாக ரூ.10 கோடி லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. அதிர்ஷ்டம் விபீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்த விபீஷுக்கு, இந்த முறை அதிர்ஷ்ட தேவதை கண் திறந்துள்ளார்.

"காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது" என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள அவர், இந்த பரிசுத்தொகையைக் கொண்டு தனது மகளின் உயர்கல்விக்காக செலவிட போவதாகவும், விரைவில் இந்தியாவுக்கே திரும்பி தனது குடும்பத்துடன் குடியேறி வாழ விரும்புவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அதிர்ஷ்டத்தால் உயர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ள இந்த ஜாக்பாட் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.