விஜய்க்கு சப்போர்ட் செய்யுற நீ என்னை பற்றி நினைத்தாயா? -விஜே வைஷூ
CineReporters Tamil March 09, 2026 08:48 PM

கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். குறிப்பாக காமெடி நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு இவர் செய்யும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது நிகழ்ச்சிகளை பற்றியும் மோதல்களை பற்றியும் பகிர்ந்து வருவார்.

நாஞ்சில் விஜயன் மற்றும் திருநங்கை விஜே வைஷு இடையேயான விவகாரம் கடந்த செப்டம்பர் 2025-ல் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2011 முதல் நண்பர்களாக இருந்ததாகவும், 2018 முதல் இருவரும் காதலித்து வந்ததாகவும் வைஷு தெரிவித்தார். தாங்கள் பல ஆண்டுகள் கணவன் – மனைவியாக வாழ்ந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.நாஞ்சில் விஜயனுக்குத் திருமணம் நடந்தபோது, அவரே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்ததாகவும், ஆனால் திருமணத்திற்குப் பிறகும் நாஞ்சில் விஜயன் தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும் வைஷு கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

மேலும் நாஞ்சில் விஜயனுக்குப் பொருளாதார ரீதியாகப் பல உதவிகள் செய்ததாகவும், ஆனாலும் வாங்கிய தொகையை கூட அவர் திருப்பி தரவில்லை என்றும் கூறினார். இந்தப் புகார்களுக்குப் பதிலளிக்கும் வகையில் நாஞ்சில் விஜயன் தனது மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்

அதில் அவர் வைஷுவை ஒரு தங்கை மற்றும் தோழி என்ற முறையிலேயே பார்த்ததாகக் கூறினார். ஆனால் கணவராக இருந்ததிலை என்று கூறினார். அந்த சம்பவத்திற்கு பிறகு இருவரும் அமைதி ஆனார்கள்.

சமீபத்தில் விஜய் திரிஷாவுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தார். விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்யு விண்ணப்பித்திருந்த நிலையில் இந்த சம்பவம்பெரும் ஆதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய் கட்சியினர், பொதுமக்கள் மட்டும்ன்றி திரைத்துறையினர் பலரும் இந்த சம்பவதடஹி ரசிக்கவில்லை. ஆனால் நாஞ்சில் விஜயன் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விஜே வைஷு ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் நீ நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கிறாய். ஆனால் என் வாழ்க்கை பற்றி ஒருபோதும் நினைக்கவே இல்லை. யாரையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என்று கூறியுள்ளார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

cinereporters.com

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.