மன்னிப்பு கேட்டது தப்புன்னு நினைக்குறேன்...! - திரிஷாவுக்கு எதிராக மீண்டும் கொதித்த பார்த்திபன்
Seithipunal Tamil March 10, 2026 08:48 PM

திரிஷா குறித்த தனது முந்தைய கருத்துக்கு மன்னிப்பு கோரியிருந்த பார்த்திபன், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அதில், "திரிஷாவை ஒரு நட்சத்திரமாகத் தாண்டி நான் பாராட்டவே நினைத்தேன்; மேடையில் நான் பேசும்போது தவறான புகைப்படம் வந்ததால் திகைத்துப் போனேன், மற்றபடி திட்டமிட்டு நான் எதையும் செய்யவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், "தவறு என்பது தவறிச் செய்வது, அதற்கு நான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டேன். ஆனால், நான் மன்னிப்பு கேட்ட பிறகும், நானே அந்தப் புகைப்படத்தைப் போடச் சொன்னதாக திரிஷா பதிவிட்ட ட்வீட் என்னை அதிர வைத்தது" என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், "அவருடைய அந்தப் பதிவு ஒரு மூன்றாம் தரமான விமர்சனம் போலத் தெரிகிறது; அவர் மீது வந்த மற்ற கொச்சையான விமர்சனங்களுக்குப் பதில் சொல்லாதவர், எனக்கு மட்டும் கண்டனம் தெரிவித்தது சரியல்ல.

இதனால் நான் மன்னிப்பு கேட்டதே தவறு என்று என் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்" எனக் குறிப்பிட்டு, தனக்கு ஆதரவாக நிற்பவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.