தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதி மக்கள் சந்திப்பு கூட்டத்திற்காக கரூருக்கு சென்றிருந்தபோது அங்கு பல ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர்.
விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் மயக்கமடைந்தனர். அதில் பலரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டனர். அந்த சம்பவத்தில் மொத்தமாக 41 பேர் மரணமடைந்துவிட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் கரூருக்கு சென்று சோதனை நடத்தினர். மேலும், பல பேரிடமும் இது பற்றி விசாரணை நடத்தினர்.. குறிப்பாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை டெல்லிக்கு நேரில் வரவழைத்து அவர்கள் விசாரணை செய்தனர்..
அதோடு விஜய்க்கு இரண்டு முறை சமன் அனுப்பி டெல்லிக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.. அதோடு, 3வது முறையாக மார்ச் 10ம் தேதியான இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கனவே சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அரசியல் பணிகளை காரணம் காட்டி இரண்டு வாரங்கள் கழித்து விசாரணை ஆஜராகிறேன் என விஜய் தரப்பு கோரிக்கை வைத்தது.
அதோடு, சென்னையில் உள்ள சிபி அலுவலகத்தில் ஆஜராகவும் அனுமதியும் கேட்கப்பட்டிருந்தது.. இந்நிலையில் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பியிருக்கும் சிபிஐ வருகிற 15-ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கூறியிருக்கிறது. சென்னையிலேயே சிபிஐ விசாரணையை சந்திக்கலாம் என கணக்கு போட்ட விஜய்க்கு இது ஏமாற்றமாக முடிந்திருக்கிறது..