நடிகராக இருந்த விஜய் திடீரென தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியல்வாதியாக மாறினார்.. அதோடு இனிமேல் நான் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனவும் அறிவித்து அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.கட்சி துவங்கியது முதலே திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜய்..
அதோடு, வருகிற சட்டமன்ற தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டி என தொடர்ந்து சொல்லி வருகிறார். விஜய் அடிப்படையில் ஒரு நடிகர் என்பதால் அவரின் ரசிகர்களின் வாக்கு அவருக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.. தவெக தனித்து நின்றாலே 18 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை வாங்கும் என பலரும் சொல்லி வருகிறார்கள்..
அதேநேரம் வெற்றிக்கு தேவையான கூட்டணியை தவெக இதுவரை அமைக்கவில்லை அல்லது தவெக எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது என்று சொல்லலாம். எனவே தவெக தனித்து போட்டியிடும் நிலைக்கு வந்திருக்கிறது.. இந்நிலையில்தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து வந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றிருக்கிறது..
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் எம். எஃப் தமீம் ‘8 மாதங்களாக தவெகவோடு பயணித்தோம்.. அவர்கள் செயல்பாடு சரியில்லாததால் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்.. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் சந்திக்க சொல்லியும் விஜய் போகவில்லை’ என தெரிவித்திருக்கிறார்.
மேலும் வரும் தேர்தலில் திமுக தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்.. அந்த கூட்டணியில் போட்டியிட வாய்ப்பும் கேட்டிருக்கிறோம்’ என சொல்லியிருக்கிறார்..