அதிர்ச்சியில் தவெக தலைவர் விஜய்..! தவெகவுக்கு ஆதரவு வாபஸ்..திமுகவுக்கு முழு ஆதரவு..!
Top Tamil News March 11, 2026 09:48 AM

ஆட்சியில் பங்கு எனும் முழக்கத்தோடு தேர்தலைச் சந்திக்கும் தவெகவுக்கு ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி தனது ஆதரவை தெரிவித்துவந்தது. இந்நிலையில், தனது தவெக ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், திமுகவுக்கு தங்கள் ஆதரவை தருவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தமீம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தவெகவுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றப் பொது தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்திருந்த ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி ஆதரவை வாபஸ் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு அளித்து உறுதுணையாக செயல்படும் என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.


 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.