கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எல்பிஜி இறக்குமதி தடைபட்டுள்ளதால் இந்தியாவில் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் விரைவில் விலை ரூ.200 வரை உயரக்கூடும் என ஆனந்த் கூறியுள்ளார்.
இன்றைய மார்ச் 10 நிலவரப்படி, சென்னையில் வீட்டு உபயோக (14.2 கிலோ) எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து, ரூ.928.50 ஆக உள்ளது. அதேபோல் வணிகப் பயன்பாட்டிற்கான (19 கிலோ) சிலிண்டர் விலை ரூ.144 உயர்ந்து, ரூ.2043.50 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிலிண்டர் விலை இன்னும் அதிகரிக்கும் என பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, விலைவாசி உயர்வை தவிக்க முடியாது. தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இந்நிலை நீட்டிக்கும் பட்சத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும், 200 ரூபாய் வரை உயரும். அதேபோல் வணிக சிலிண்டர் விலையும் 300 முதல் 400 ரூபாய் வரை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றார்.