விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் உட்பட மாவட்டங்கள் முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் உள்ளன. இதில், சிவகாசியில் மட்டும் சுமார் 3 ஆயிரம் பட்டாசுக் கடைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் பட்டாசுக் கடைகளில் தீபாவளி விற்பனைக்காக 3 மாதங்கள் மட்டும் 50 சதவீதக் கடைகள் இயங்கும். 20 சதவீதக் கடைகளில் ஆண்டு முழுவதும் பட்டாசு விற்பனை நடைபெறும். 30 சதவீத பட்டாசுக் கடைகள் பூட்டியே கிடக்கின்றன.
சிவகாசி
பூட்டிக் கிடக்கும் பல பட்டாசுக் கடைகளில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை ஸ்டாக் வைத்துள்ளனர். பட்டாசு ஸ்டாக் வைப்பதற்காகவே சிலர் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வாங்கி வைத்துள்ளனர். குறிப்பாக, சில பகுதிகளில் உள்ள பட்டாசுக் கடைகளில் வெளியே பூட்டுப்போட்டு உள்ளே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றன. பட்டாசுக் கடைகளுக்கு தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது.
`ஆபத்தான பட்டாசு ஆலை பணிகளில் ரோபோ' - கற்பனையாக ஒரு AI ஆல்பம்இருந்தபோதிலும், அனுமதி வாங்கும்போது ஒரு நிலையில் கடை இருந்தாலும், அனுமதிக்குப் பின்னர், கடைகளில் விதிமுறைகளை மீறி செட் அமைப்பது, இருப்பு அதிகமாக வைப்பது எனச் சிவகாசி பகுதியில் இயங்கும் பல்வேறு கடைகளில் விதிமுறைகள் மீறல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு பட்டாசுக் கடை வைக்க அரசின் அனுமதி வழங்கப்படுகிறது.
பட்டாசு தயாரிப்பு
இதில், முறையாக லைசன்ஸ் பெற்று இயங்கும் கடைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே உள்ளன. மற்ற கடைகள், லைசன்ஸ் இல்லாமலேயே விற்பனை செய்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அனுமதி இன்றி இயங்கும் பட்டாசுக் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சிவகாசியில் பல பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை முறையாகப் பின்பற்றாமல் கடைகள் அமைக்கப்படுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. இதுபோன்று கடைகளுக்கு அனுமதியும் அளிப்பதால் விபத்து ஏற்படுகிறது.
``எங்கள் பண்டிகைகளில் பட்டாசு இல்லை!'’ - 'சத்தமில்லா' தீபாவளி கொண்டாடும் கிராமங்களின் பின்னணிசிவகாசி அருகே மாரனேரியில் தனியார் பள்ளிக்கூடம் அருகே சுமார் 200 மீட்டர் தூரத்திற்குள் 10-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பட்டாசுக் கடைகளின் அருகில் பட்டாசு ஆலைகளும் இயங்கி வருகிறது.
இந்தப் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசுக் கடைகளில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் அப்பள்ளியில் கல்வி பயிலும் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள்.
பள்ளி அருகில் பட்டாசு ஆலை கட்டிடங்கள்
இதனால் பெற்றோர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பட்டாசுக் கடைகள் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளில் சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனிமேல் இதுபோன்று பள்ளிகள் அருகில் பட்டாசு ஆலை மற்றும் பட்டாசுக் கடைகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது எனப் பெற்றோர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டாசு மோசடி... பொறுப்பேற்க மறுப்பது சரியா? - ‘Money’துளிகள்..!