JEE முதன்மை தேர்வின் முக்கிய அறிவிப்பு.. ஹால் டிக்கெட் எப்போது கிடைக்கும்?
Webdunia Tamil March 22, 2026 05:49 PM

JEE முதன்மைத் தேர்வின் ஏப்ரல் மாத அமர்விற்கான தேர்வு City Slip தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று, தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி இந்த City Slipஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2026-ஆம் ஆண்டுக்கான ஏப்ரல் மாத JEE முதன்மை தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன. மேலும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேர்வு தொடங்குவதற்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும். மாணவர்கள் மார்ச் 30-ஆம் தேதியிலிருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள இணைப்பை கிளிக் செய்து, விவரங்களை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டை பெற்று Printout எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏப்ரல் அமர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு தேசியத் தேர்வுகள் முகமையின் (jeemain.nta.nic.in) இணையதளத்தை தொடர்ந்து கவனித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.