விஜய் மட்டும் சரின்னு ஒருவார்த்தை சொல்லியிருந்தா!.. ஆதவ் அர்ஜுனா பேச்சு!...
Webdunia Tamil March 22, 2026 05:49 PM


ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். தனிக்கை சான்றிதழ் கிடைக்காமல் போனதால் இப்போது வரை படம் வெளியாகவில்லை
. படம் ரிலீசுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு படம் மறுதணிக்கை செய்யப்பட வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் ஒரு மாதமாகியும் தீர்வு கிடைக்கவில்லை..

இதையத்து, பிப்ரவரி மாதம் 5ம் தேதி தணிக்கை வாரியத்திற்கு எதிரான வழக்கை தயாரிப்பாளர் வாபஸ் பெற்றார். அதோடு மறு தணிக்கைக்கும் விண்ணப்பிக்கப்பட்டது. சமீபத்தில்தான் இப்படம் மறுதணிக்கையும் செய்யப்பட்டது. ஆனாலும் ஜனநாயகனில் அரசியல் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. தேர்தல் நேரம் என்பதாலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிற ஒருவரே இந்த படத்தில் நடித்திருப்பதாலும் தேர்தல் ஆணையம் படத்தை பார்க்க வேண்டும் என தணிக்கை வாரியம் பரிந்துரை செய்திருக்கிறது..

இந்நிலையில், நேற்று ஒரு விழாவில் பேசிய தவெக முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தவெகவை பாஜகவின் B டீம் என செல்லி வருகிறார்கள். பாஜகவுடன் டெல்லியில் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் பேசுகிறார்கள்.. அப்படி நாங்கள் பேசியிருந்தால் ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ஜனவரி 9ம் தேதி வெளியாகியிருக்கும்.. விஜய் 1500 கோடி சம்பாதித்திருப்பார். தவெக பற்றி பொய்யான தகவல்களை திமுகவினரும், அதிமுகவினரும், பாஜகவினரும் பரப்புகிறார்கள் என்று அவர் பேசியிருக்கிறார்..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.