தவெக-வினர் ஷாக்..! விஜய்யை பின் தொடர்ந்து விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு..!
Top Tamil News March 24, 2026 09:48 AM

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த விஜய், பின்னர் அங்கிருந்து, கூட்டம் நடைபெற்ற செங்கிப்பட்டிக்கு காரில் பயணித்தார்.

அவரது வாகனத்தை அவரது ரசிகர்கள் பலரும் இருசக்கர பின்தொடர்ந்து சென்றனர். இதில் பல இடங்களில் விபத்து ஏற்பட்டது. அப்படி தஞ்சாவூர் மாவட்டம், வளம்பக்குடி அருகே நின்று கொண்டிருந்த காவல்துறையினர் வாகனம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விக்னேஷ், அவரது நண்பர் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதில் விக்னேஷ் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.