Top 10 News Headlines: தனித்து போட்டியிடும் விசிக.. டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல்.. ஐபிஎல் அப்டேட்.. 11 மணி செய்திகள்!
பேச்சி ஆவுடையப்பன் March 24, 2026 02:14 PM
- 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி நாளை பரப்புரையை தொடங்குகிறார். மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மந்தைவெளி மார்க்கெட் அருகே நடக்கும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
- 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீடு கூட்டணி கட்சிகளுடன் முடிவுற்ற நிலையில் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- கேரளம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.
- சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை இடத்தையும் கேட்டுப் பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- புதுச்சேரி சட்டமன்ற தொகுதியில் 3 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிவதாக திருமாவளவன் அறிவிப்பு - மற்ற தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
- சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்கி வெற்றி வாய்ப்பு இருக்கும் என ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தஞ்சை தவெக கூட்டத்தில் விஜயின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. 19 நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பின் விக்னேஷ் உயிரிழந்தார்.
- லாட்டரி அதிபர் மார்டினின் மகனும், லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவருமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு ரூ.597 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் உள்ளதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளது அரசியல் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
- ரன்வீர் சிங் மற்றும் சாரா அர்ஜூன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள துரந்தர் 2 படம் அனைத்து இந்தியரும் பார்க்க வேண்டிய படம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
- பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக டெல்லி சட்டமன்ற சபாநாயகருக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- ஃபிடே மகளிர் கேண்டிடேட்ஸ் போட்டியில் இருந்து இந்தியாவின் நட்சத்திர சதுரங்க வீராங்கனை கொனேரு ஹம்பி விலகியுள்ளார்.மத்திய ஆசியாவில் நிலவும் போர் காரணமாக ஹம்பி விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக உக்ரைனின் அன்னா முசிசுக் சேர்க்கப்பட்டுள்ளார்.
- ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் காயமடைந்த சாம் கரனுக்குப் பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷனகா சேர்க்கப்பட்டுள்ளார்.