இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ஐபிஎல் தொடரின் 19 வது தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதில் முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 07 ,அணிக்கு தொடங்கியது. இந்த முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.
போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் படித்தார்முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர்.
அப்போது 02வது ஓவரை வீசிய ஜேகப் டஃபி சிறப்பாக பந்து வீசி திணறடித்தார். அந்த ஓவரில் அபிஷேக் சர்மா (07 ரன்), டிராவிஸ் ஹெட் (11 ரன்) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் கேப்டன் இஷான் கிஷணும், நிதிஷ் குமார் ரெட்டியும் இணை சேர்ந்தனர்.
இதில், 05வது ஓவரை வீசிய ஜேகப், தனது 03 வது விக்கெட்டாக நிதிஷ் குமாரை ஒரு ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். அதனால், 29 ரன்னுக்கு 03 விக்கெட் இழந்து சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது. இருப்பினும், அதன்பின்னர் இணை சேர்ந்த இஷான் கிஷாண், ஹென்றிச் கிளாசன் பெங்களூரு அணியின் பந்து வீச்சை அதிரடியாக ஆடினர்.
இந்த இணை 97 ரன்கள் விளாசிய நிலையில் கிளாசன் 31 ரன்னில் வீழ்ந்தார். அதன் பின்னும் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இஷான் கிஷண் (38 பந்து, 05 சிக்சர், 08 பவுண்டரி, 80 ரன்) என அசத்தினார்.
பின்னர், அபிநந்தன் சிங் வீசிய 16-வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி ஓவர்களில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதும், அனிகேத் வர்மாவின் (18 பந்து, 04 சிக்சர், 03 பவுண்டரி, 43 ரன்) அதிரடி ஆட்டத்தால், சன்ரைசர்ஸ் அணி, 09 விக்கெட் இழப்புக்கு, 201 ரன் குவித்தது.
அதையடுத்து, 202 ரன் இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. சால்ட் 08 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த படிகல் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி 15.4 ஓவரில் 203 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரஜத் படித்தார் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து கீங் விராட் கோலி 69 ரன்கள் எடுத்து இருந்தார்.