சட்டமன்ற தேர்தல் 2026; அதிமுகவுடன் 18 இடங்களிலும் நேரடியாக போட்டியிடும் காங்கிரஸ்..!
Seithipunal Tamil March 29, 2026 06:48 AM

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி, ஒரே கட்டமாக நடைபெற்று, மே 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த தேர்தலில், திமுக மெகா கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 10 புதிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் அதிமுகவுடன் நேரடியாக மோதுகிறது.

அதன்படி, பொன்னேரியில் அதிமுகவின் சிறுணியம் பலராமன், ஸ்ரீபெரும்புதூரில் அதிமுகவின் பழனி, ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் மனோகரன், கடலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோருடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் மோதுகின்றனர்.

அடுத்ததாக, சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராகவும், திருவாடானையில் அதிமுகவின் கீர்த்திகா, திருவைகுண்டத்தில் அதிமுகவின் சண்முகநாதன், ஊத்தங்கரையில் அதிமுகவின் தமிழ்செல்வன், துறையூரில் அதிமுகவின் சரோஜா ஆகியோரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர்.

தொடர்ந்து கவுண்டம்பாளையத்தில் அருண்குமாருக்கு எதிராகவும், ஆத்தூரில் ஜெயசங்கரன், சிங்காநல்லூரில் ஜெயராமனுக்கு எதிராகவும், அம்பாசமுத்திரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோருடன் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர்.

மேலும், அதிமுக போட்டியிடும் கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோவில், மேலூர் ஆகிய தொகுதிகள் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அத்துடன், சோளிங்கர், மயிலாடுதுறை, குளச்சல், பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் பாமகவுடன் காங்கிரஸ் மோதுகிறது.

அடுத்து, உதகமண்டலம், விளவங்கோடு, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் பாஜக உடன் மோதும் காங்கிரஸ், காரைக்குடி, நாங்குநேரி தொகுதிகளில் அமமுகவையும், கிள்ளியூரில் தாமகவையும் எதிர் கொள்ளவுள்ளது. இதில் குறிப்பாக காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் சீமான், அமமுகவின் தேர்போகி பாண்டியன் ஆகியோருடன் காங்கிரஸ் வேட்பாளர் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.