சட்டமன்றத் தேர்தலையொட்டி, கேரளாவின் பாலக்காட்டில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொள்ள கேரளா சென்றார். அப்போது கேரளாவின் பாரம்பரிய இசைக்கருவியான 'செண்டை மேளம்' கொட்டி பிரதமர் மோடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும், ரோட் ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அங்கு உரையாற்றிய பிரதமர் மோடி, குறிப்பிட்டுள்ளதாவது; கேரளா கடந்த பல தசாப்தங்களாக இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் கூட்டணி ஆகிய இரு சுயநல அரசியல்வாதிகளுக்கு இடையே சிக்கித் தவிப்பதாக குற்றஞ்சாட்டினார்.மேலும், வளைகுடா நாடுகளில் நிலவும் அசாதாரண சூழலை அரசியல் ஆதாயத்துக்கு காங்கிரஸ் பயன்படுத்துவதாக கடுமையா விமர்சித்து பேசினார்.
அத்துடன், ஒருவர் ஊழல்வாதி என்றால், மற்றொருவர் மகா ஊழல்வாதி; ஒருவர் வகுப்புவாதி என்றால், மற்றொருவர் மகா வகுப்புவாதி என்று இடதுசாரி முன்னணி மற்றும் காங்கிரசை விமர்சித்தார். மேலும், கேரளாவின் கடன் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்து, தற்போது 05 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அதேபோல் வெளிநாட்டில் வசிக்கும் சுமார் 01 கோடி இந்தியர்களின் உயிரைப் பணயம் வைத்து, காங்கிரஸ் கட்சி ஆபத்தான கருத்துக்களைக் கூறி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது என்று தெரிவித்தார்.