''210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்;'' எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..!
Seithipunal Tamil April 02, 2026 06:48 AM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரபல செய்தி சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அப்போது இந்த 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாகவே மாறிவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், திமுகவும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்ததை சுட்டிகாட்டி ஈபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

சிவகங்கையில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டபோது, திமுக ஆட்சியை கடுமையாக சாடியதோடு, முதலமைச்சர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கும் பதிலளித்துள்ளார்.

அதாவது, ஈபிஎஸ் கரங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதாக முதலமைச்சர் விமர்சித்ததையும் சுட்டிக்காட்டி பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில்தான் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இது குறித்து பிரபல செய்தி சேனலுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது;

அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அமோகமாக இருப்பதாகக் கூறியுள்ளதோடு, ஏற்கனவே 195 சட்டமன்றத் தொகுதியில் மக்களைச் சந்தித்திருக்கிறேன். செல்லும் இடம் எல்லாத்திலும் மக்கள் எழுச்சி இருக்கிறது. நடைபெறும் தேர்தலில் 210 இடங்களில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.