Karuppu Audio Launch : அன்பான ரசிகர்களே ரெடியா..சூர்யாவின் கருப்பு படத்தின் ஆடியோ லாஞ்ச் எப்போ தெரியுமா
ராகேஷ் தாரா April 04, 2026 03:44 PM

சூர்யாவின் கருப்பு திரைப்படம் வரும் மே 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். பல்வேறு ரிலீஸ் தேதிகள் ஒத்திவைப்பிற்கு படத்தின் ரிலீஸ் தேதி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது 

சூர்யா ரசிகர்கள் கடந்த ஒரு ஆண்டாக ஆவலுடன் காத்திருக்கும் படம் கருப்பு. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்காக, ரெட்ரோ படப்பிடிப்புக்குப் பிறகு சூர்யா இதில் இணைந்தார்.

முன்னதாக, ஆர்.ஜே. பாலாஜி த்ரிஷாவை வைத்து மாசானி அம்மன் என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். பின்னர் அதே கதையை சூர்யாவுக்கு ஏற்ற வகையில் மாற்றி, கருப்பு படமாக உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருந்த நிலையில், பின்னர் சாய் அப்யங்கர் இசையமைப்பாளராக இணைந்தார்.

படத்தின் படப்பிடிப்பு 2024 நவம்பரில் தொடங்கி, 2025 நவம்பரளவில் கிட்டத்தட்ட நிறைவடைந்தது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. முதலில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. 

கருப்பு இசை வெளியீடு 

கருப்பு படத்தில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியான நாங்க நாலு பேரு பாடல் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அடுத்தபடியாக சாய் அப்யங்கர் பால் டப்பா இணைந்து பாடியிருக்கும் மூன்றாவது பாடல் வெளியாக இருக்கிறது. கருப்பு படத்தின் இசை வெளியீடு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த கருப்பு படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாடல்கள் தவிர்த்து படத்தில் பின்னணி குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.