உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் பாசி மாலை விற்று சோசியல் மீடியாவில் புகழ் பெற்றவர் மோனலிசா. இவர் திடீரேன கடந்த சில மாதங்களுக்கு கேரளாவில் திருவனந்தபுரம் அருகே திடீரென கோயில் ஒன்றில் பர்மான் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணத்தின் போது கொடுத்த ஆதார் கார்டில் மோனலிசாவின் வயது 18ஐ கடந்து இருந்ததாக கூறி அவர்கள் திருமணத்திற்கு கோயில் நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது. ஆனால் மோனலிசா மைனர் என்றும், அவர் காதல் ஜிகாத் மூலம் திருமணம் செய்யப்பட்டுள்ளார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மோனலிசாவின் வயது குறித்து தேசிய பழங்குடியின கமிஷன் விசாரணை நடத்தியது.
மோனலிசா பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் அக்கமிஷன் விசாரித்தது. விசாரணையில் மோனலிசாவின் பிறப்பு சான்றுகள் தேடி எடுக்கப்பட்டது.
மோனலிசா மத்திய பிரதேசத்தில் உள்ள மகேஷ்வர் மருத்துவ கல்லூரியில் 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்திருந்தார். அந்த வகையில் மோனலிசாவின் வயது 16 ஆகும். எனவே மைனரை பர்மான் கான் திருமணம் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து மோனலிசாவின் கணவர் பர்மான் கான் மீது மைனரை திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் மத்திய பிரதேச மாநிலம் மகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பர்மான் கானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து மோனலிசாவோ அல்லது அவரது கணவரோ எந்த பதிலும் கொடுக்கவில்லை. ஆனால் மத்திய பிரதேச போலீஸார் எந்நேரமும் பர்மான் கானை கைது செய்யும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.