6 மாதத்தில் எய்ம்ஸ்... எடப்பாடி முதல்வரானதும் மெட்ரோ..!: மதுரையில் அண்ணாமலை கொடுத்த அதிரடி வாக்குறுதி!
Top Tamil News April 13, 2026 09:48 AM

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பரப்புரை மேற்கொண்டார் அப்போது அண்ணாமலைக்கு வேல் பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் வாசலில் நிற்கிறோம். திமுக வஞ்சித்தும் கூட இந்த பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து சேவை செய்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நமது கூட்டணி கட்சிகள் யாராக இருந்தாலும் இஸ்லாமியர்களுடன் அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம்.

102 ஆண்டுகளாக இருக்கக்கூடிய பிரச்சனை மதுரை உயர் நீதிமன்றம் மிக நிராகரித்து திமுக தலைவர்கள் என்னவெல்லாம் பொய் சொல்லி இருக்கிறார்கள் பாருங்கள். மேலே இருப்பது தீபத்தூண் அல்ல மயில் கல், அதன் பின்னர் அதை அளவைக் கல் என்று சொன்னார்கள், ஜெயின் துறவிகள் படிப்பதற்காக வைத்த விளக்கு என்று சொன்னார்கள்.

தமிழ்நாட்டில் அனைவரும் அவர்களின் நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கொடுத்தும் கூட, மாநில அரசு பிளவை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டியது.

நாம் எந்த மதத்திற்கும் எதிரானவர் அல்ல நான் கேட்பது முருகனை வழிபடுவதற்கு உரிமையை கேட்கிறோம். நீதிமன்ற உத்தரவை மீறியதால் காவல் ஆணையர் மன்னிப்பு கேட்கும் ஜனநாயகத்தை பார்க்கிறோம். இன்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடக்கிறது.

திமுக வாக்கு வங்கிக்காக மலிவு அரசியலுக்கு பிரச்சனையாக்கி புண்படுத்தி திருப்பரங்குன்றத்தை பார்க்கிறது. ஏப்ரல் 23ஆம் தேதி நீங்கள் கொடுக்கும் தீர்ப்பு மிக முக்கியமானது. நீதிமன்ற தீர்ப்பை திமுக ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். ஆகவே நீங்கள் அனைவரும் அண்ணன் ராஜன் செல்லப்பாவை இந்த தொகுதியில் மிகப்பெரிய வாசல் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

ஏப்ரல் இரண்டாம் தேதி கனிமொழி திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அதிமுகவும் பாஜகவும் மத கலவரத்தை உண்டாக்கியதாக சொன்னார். திமுக தலைவர்கள் மத கலவரத்தை தூண்ட காரணமாக இருக்கிறார்கள். தமிழகத்தின் கண்கள் எல்லாம் திருப்பரங்குன்றத்தின் மீது உள்ளது.

அண்ணன் சட்டமன்ற உறுப்பினராக மாறும்போது தான் எய்ம்ஸ் திறக்கப்பட போகிறது. எய்ம்ஸ் தமிழகத்திற்கு எதற்காக வந்தது புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் கேட்டுக் கொண்டதால் வந்தது. மதுரைக்கு எய்ம்ஸ் வந்தால் தமிழகத்தில் இருக்கும் அனைத்தும் உதவியாக இருக்கும் என்பதால் இங்கு எய்ம்ஸ் கொண்டுவரப்பட்டது. இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் எய்ம்ஸ் முழுவதுமாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவில் 10 எய்ம்ஸ் கல்லூரி கட்டப்பட்டுள்ளது. அதில் மிகப்பெரிய எய்ம்ஸ் எது என்றால் மதுரையில் வரவில்லை எய்ம்ஸ் மருத்துவமனை தான். 2022 இலிருந்து 24 வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்தால் பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் பெயர் சென்றுவிடும் என்னும் காரணத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை தாமதப்படுத்தி தாமதப்படுத்தி அனுமதி கொடுத்தார்கள். அனுமதி முறையாக கொடுத்திருந்தால் எப்போதோ எய்ம்ஸ் திறக்கப்பட்டு இருக்கும். 1200 கோடி ரூபாயில் முடிய வேண்டிய எய் ம்ஸ் இப்போது 2000 கோடியில் கட்டப்பட உள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள நீங்கள் தான் மதுரை எய்ம்ஸ் இன் முதல் பயனாளிகள்.

மதுரை மெட்ரோ திருப்பரங்குன்றத்திற்கு வரவுள்ளது. ஆனால் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆன பிறகு தான் மெட்ரோ வர உள்ளது. அதாவது மத்திய அரசு தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் மதுரை கோயம்புத்தூர் மெட்ரோ குறித்து அனுப்பியுள்ள கடிதத்தில், இன்று நீங்கள் மதுரை மெட்ரோ என்று சொல்வது போக்குவரத்து தடை இல்லாத பேருந்துக்கு தான் மத்திய அரசின் கடிதத்தில் உள்ளது. மதுரையில் மெட்ரோவுக்கு எந்த முயற்சியும் எடுக்காமல் தவறான அறிக்கையை கொடுத்துவிட்டு முழு பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நான்கு மாதம் பிரதமர் மோடியை சந்தித்து மதுரைக்கும் கோயம்புத்தூருக்கும் மெட்ரோ வேண்டும் என்று கேட்டதற்கு நாங்கள் மெட்ரோவை நிராகரிக்கவில்லை அவர்கள் கொடுத்த திட்ட அறிக்கையில் உள்ள தவறுகளை மாற்றுவதற்காக சொல்லி அனுப்பி இருக்கிறோம். அதன் பின்னர் கொடுப்போம் என கூறினார்.

அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்ற பிறகு எய்ம்ஸ் கட்டி முடித்து திறக்கப்பட உள்ளது. எய்ம்ஸ் மற்றும் மெட்ரோ வேண்டுமென்று நினைக்கிறோம் நிச்சயமாக வரும்.

அண்ணனுக்கு எதிராக நிற்கும் வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் மீது கிரிப்டோ கரன்சியை திருடியதாக ஒரு வழக்கு, இரண்டு கொலை மிரட்டல் வழக்கு உள்ளது. அவரது கணவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு உள்ளது. எனவே கணவரும், மனைவியும் சட்டமன்ற உறுப்பினராக வருவதற்கு தகுதி படைத்தவர்களா. அவருடைய வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து இருக்க வேண்டும் எனவே அவர் பெறக்கூடிய வெற்றி செல்லாது. அண்ணன் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து யாரும் வெற்றி பெற முடியாது என திமுகவிற்கு தெரியும் அதனால் உப்புக்கு சப்பானியாக வேட்பாளரை நிறுத்தி இருக்கிறார்கள்.

மதுரையின் மேயராக இருந்தபோது சிறந்த மாநகராட்சி என பட்டம் பெற்றார். ஆனால் இப்போது இருக்கும் மாநகராட்சி மேயர் 200 கோடி ரூபாய் ஊழலில் ராஜினாமா செய்தார் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 நகரத்திற்கு இந்தியாவில் அண்ணா நகரம் என பட்டியல் போடப்பட்டதில் குப்பை நகரம் என்னும் விருதை மதுரைக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.

கிரிப்டோ கரன்சி திருட்டு வழக்கு 14 வயது பெண் மீது பாலியல் வழக்கு உள்ள கணவர் மனைவியை மட்டும் செல்லப்பாவிற்கு எதிராக நிறுத்தி இருக்கிறார்கள். முருகனுக்காக திமுகவிற்கு எதிரான ஓட்டு அண்ணன் ராஜன் செல்லப்பாவிற்காக அதிமுகவிற்கு வாக்களித்து அவர்களை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

ஆந்திராவிலும், பீகாரிலும் ஆலங்கட்சிக்கும் பிரதமருக்கும் உறவு உள்ளது. தமிழகத்தில் ஸ்டாலினுக்கும் பிரதமர் மோடிக்கும் உறவு உள்ளதா. ஸ்டாலின் அவர்கள் செஸ் ஒலிம்பியாட்டிற்கு பிரதமரை அழைத்தார் அவரும் மரியாதை கலந்து கொண்டார். மேடைகளில் பிரதமரை அவமானப்படுத்தினார்கள். யாரும் டெல்லிக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை, பயப்படத் தேவையில்லை. அனைவருக்கும் தனித்தனி கொள்கை கோட்பாடு உள்ளது திமுகவை வீழ்த்துவதற்காக ஒரே கூட்டணியில் இணைந்துள்ளோம். திமுக தலைவர் ஸ்டாலின் மேடைக்கு மேடை பொய் பேசி சுற்றி கொண்டிருக்கிறார்.

திமுகவின் மதுரையில் யாரும் பொறுப்பில் இருக்கக் கூடாது அப்போதுதான் மதுரை சுத்தமான மாநகராக மதுரை மாறும். மீண்டும் ஒரு சரியான திட்ட அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் பேசி மெட்ரோவை வாங்கித் தருவோம். எய்ம்ஸ் இன்னும் ஆறு மாதத்தில் திறக்கப்படும் என உறுதி அளித்து ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் பிரச்சாரத்திற்காக வந்த அண்ணாமலையிடம் கையில் விளக்குடன் வந்து மலை மீது விளக்கேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.