இது கதையல்ல... நிஜம்... துரந்தர் படம் ரூ.3 ஆயிரம் கோடி வசூல்..!
Top Tamil News April 15, 2026 09:48 AM

ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான துரந்தர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்திய ராணுவத்தில் பணிபுரியும் ஒரு உளவாளி தொடர்பான கதை இது. முதல் பாகம் சூப்பர் ஹிட் ஆகி உலகளவில் 1307 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது.

இந்த படத்தின் 2ம் பாகம் துரந்தர் தி ரிவெஞ்ச் என்ற பெயரில் கடந்த வியாழக்கிழமை உலகமெங்கும் வெளியானது.முதல் பாகமான துரந்தர், பாகிஸ்தானின் பயங்கரவாத நிழல் உலக விஷயங்களை மேலோட்டமாக பேசியது. அஏத இரண்டாம் பாகமான துரந்தர் தி ரிவெஞ்ச் பல விஷயங்களை நிகழ்கால சம்பவங்களுடன் ஒன்றிணைத்து நேரிடையாக பலவற்றை சிந்திக்க வைத்தது. இதுவே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

எதிர்பார்ப்பை மீறும் அளவுக்கு இரண்டாம் பாகம் இருந்ததால், மீண்டும் மீண்டும் படத்தை பார்க்க துவங்கினர். இதனால் படத்தில் வசூல் வேட்டை அதிகமாக இருந்தது. படம் இன்னும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வரை ரூ.1712 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இரண்டு பாகங்களும் சேர்ந்து ரூ.3,019 கோடி கடந்துள்ளது.இந்தப் படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் சேர்த்து உலகளவில் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எந்த படமும் இந்த சாதனையை நிகழ்த்தவில்லை.இந்திய திரைப்பட வரலாற்றில் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 1 மற்றும் 2 ம் பாகங்கள் இணைந்து 2438 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.