மிஸ்டர் எக்ஸ் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் கெளதம் ராம் கார்த்திக் முத்துராமலிங்கம் படத்தில் நடித்தது தன்னுடைய சினிமா கரியரில் தான் செய்த மிகப்பெரிய தவறு என்று கூறியுள்ளார். போதுமான விவரமில்லாத சமயத்தில் தான் இந்த அந்த படத்தில் நடித்ததாக அவர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே மணிரத்னம் இயக்கத்தில் நடித்ததால் தமிழ் சினிமாவில் கெளதம் கார்த்திக் பெரிய உயரத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் ரசிகரகளிடம் எந்த வித கவனத்தையும் ஈர்க்கவில்லை. 2017 ஆம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் முத்துராமலிங்கம் திரைப்படத்தில் கெளதம் கார்த்திக் நடித்தார். இந்த படம் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் கெளதம் கார்த்தி மனம் திறந்து பேசியுள்ளார்
#Mutharamalingam is an old story that I regret doing. It was a big mistake on my part due to a lack of knowledge and understanding. It remains one of the failures in my life, career, and filmography. After that, I avoided rural genres.
— Movies Singapore (@MoviesSingapore) April 16, 2026
- #GauthamKarthik pic.twitter.com/bug8oZFn94
கெளதம் கார்த்திக் பேசியபோது " முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்காக நான் வருத்தப்படுகிறேன். அது நான் செய்த பெரிய தவறு. போதுமான புரிதல் இல்லாத காரணத்தினால் நான் அந்த படத்தில் நடித்தேன். என்னுடைய கரியரில் மிகப்பெரிய தோல்வியாக அந்த படம் அமைந்தது. இதனால் மீண்டும் அதே மாதிரியான கதைக்களத்தில் நடிப்பதை தவிர்த்தேன். அதன்பின் நான் நடித்த ரங்கூன் , ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என நான் நிறைய தவறான முடிவுகளை எடுத்திருக்கிறேன். இப்போது அதை சரிசெய்யும் விதமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன் " என்று கூறியுள்ளார்.