தல அஜித்தின் பர்த்டே ஸ்பெஷல்… ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் பில்லா படம்!
TV9 Tamil News April 16, 2026 04:48 PM

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தமிழ் சினிமாவில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பில்லா. 1980-ம் ஆண்டு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தினை அதே பெயரில் ரீ மேக் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் பிரபு, ரஹ்மான், நயன்தாரா, நமீதா, சந்தானம், ஆதித்யா மேனன், ஜான் விஜய், யோக் ஜபே, மாஸ்டர் அவ்னிஷ், டி.பாலசுப்ரமணியம், ஹேசல் கீச், வித்யாசாகர், தரணி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை தயாரிப்பு நிறுவனங்களான ஆனந்தப் பிக்சர் சர்கியூட் மற்றும் நைஜல் விக் ஜெஃபர் ஸ்டூடியோ உடன் இணைந்து தயாரிப்பாளர் எல். சுரேஷ் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படத்தைப் போல பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

ரீ ரிலீஸ் ஆகும் நடிகர் அஜித் குமாரின் சூப்பர் ஹிட் பில்லா படம்:

அஜித்தின் நடிப்பில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி வருகின்ற மே மாதம் 1-ம் தேதி 2026-ம் ஆண்டு நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது. அவரது 55-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த பில்லா படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகின்றது. இது தொடர்பான அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… லப்பர் பந்து படத்தில் நான் தான் முதலில் நடிக்க வேண்டியது – எஸ்.ஜே.சூர்யா சொன்ன விசயம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

18 வருடங்கள் கழித்து..
அஜித் பிறந்தநாள் மே1 ம் தேதி!#billa in theatres may 1st!

Celebrating 18 Years of the Blockbuster#AjithKumar #VishnuVardhan
@anandapicturescircuit #LSuresh #yuvanshankarraja #niravsha #Nayanthara #Namitha @johnsoncinepro #BillaTamilMovie #Ak… pic.twitter.com/KfWEueszdA

— Ramesh Bala (@rameshlaus)

Also Read… KHxRK போன்ற ஒரு படத்தில் பணியாற்றுவது எங்களுக்கு ஒரு சிறப்பான தருணம் – அனிருத்

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.