வெயில்ல சுத்தி விஜய் இப்படி கருத்துப்போயிட்டாரே!.. போட்டோ பாத்து ஃபீல் பண்ணும் ரசிகைகள்!...
Webdunia Tamil April 17, 2026 09:48 PM


நடிகர் விஜய் சிறுவயதிலிருந்தே சொகுசாக வளர்ந்தவர். அவர் எப்போது என்ன கேட்டாலும் கிடைக்கும் குடும்பம் அவருடையது. பிரபல இயக்குனராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே செல்ல மகன் விஜய். விஜய் நடிகரான பின்னர் அவரின் வாழ்க்கை இன்னும் சொகுசாக மாறியது.. ஏனெனில் ஷூட்டிங் நடக்கும் இடங்களில் அவருக்கென ஒரு பிரத்தியோக ஏசி கேரவன் எப்போதும் இருக்கும்.

ஷாட்டில் நடித்துவிட்டு அடுத்த நிமிடமே கேரவனுக்கு போயிடுவார்.. அடுத்த ஷாட் ரெடி என்றால் மட்டுமே கேரவனிலிருந்து இறங்கி வருவார்.. ஜூஸ் முதல் ஸ்டார் ஹோட்டலில் உணவு வரை விஜய் என்ன கேட்டாலும் அவரின் இடத்திற்கே வந்து கொடுப்பார்கள். 6 மணி ஆகிவிட்டால் நேராக வீட்டுக்கு சென்று விடுவார்..



வீட்டிலும் ஃபுல் ஏசிதான்.. வெளியே சென்றாலும் கார் கூட ஏசிதான்.. இப்படி ஏசியிலேயே பிறந்து வளர்ந்தவர் விஜய் .ஆனால் தற்போது அரசியலுக்கு வந்து விட்டதால் பல இடங்களுக்கும் பிரச்சாரத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் வெயிலில் அவர் நிறைய அலைய வேண்டியிருக்கிறது.. பிரச்சாரம் வாகனத்தின் மீது வெயிலில் நின்றபடி மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கை காட்டுகிறார்.. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் வெயில் கொளுத்துகிறது.. ஆனால் தவெகவுக்கு வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் பல இடங்களில் ரோட் ஷோ செய்கிறார்.. வெயிலில் நிறைய நேரம் நிற்கிறார்...

இதையெல்லாம் விஜயால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது. ஏனெனில் ஒருநாள் பிரச்சாரம் செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவர் ஓய்வெடுக்கிறார்.. இந்நிலையில்தான் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் தவெக தேர்தல் அறிக்கைகளை புத்தகமாக வெளியிட்டார் விஜய். அப்போது அவரின் முகமே மாறியிருந்தது.. வெயிலில் சுற்றி அவரின் முகத்தின் தோல் நிறங்கள் கூட மாறிவிட்டது.



இது தொடர்பான புகைப்படங்களை விஜய் ரசிகர்களும், ரசிகைகளும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ‘தளபதி வெயிலில் சுற்று கருத்து போய்விட்டார்.. முகமே வாடி போய்விட்டது.. முன்பு அவரின் முகத்தில் இருந்த பிரஸ்னஸ் இப்போது இல்லை’ என்று ஃபீல் பண்ணி பதிவிட்டு வருகிறார்கள்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.