ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம்!. தவெக தேர்தல் அறிக்கை!..
Webdunia Tamil April 17, 2026 09:48 PM


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் சில தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த நிலையில் தற்போது தவெகவின் முழு தேர்தல் வாக்குறுதிகளையும் ஒரு புத்தகமாக உருவாக்கி மக்களிடம் கொடுத்துள்ளனர். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது..

5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி

5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீத பயிர் கடன் தள்ளுபடி

கரும்பு டன்னுக்கு ரூ.4500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்

5 லட்சம் இலவச சோலார் பம்பு செட்டுகள் கொடுக்கப்படும்

முதியோருக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்படும்

5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்

பதிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு 25 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படும்

அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குழாய் வழி குடிநீர் வசதி

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம்

ஒப்பந்த ஆசிரியர்கள் தாமாக பணி நிரந்தரம் செய்யப்படுவர்

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்தியோக மாஸ்டர் பிளான்

தமிழ்நாட்டை இந்தியாவின் ஏஐ தலைநகரமாக மாற்றுவோம்

21 நாட்களுக்குள் வணிக உரிமை உத்தரவாதம்

அரசு திட்டங்கள், ரேஷன் உள்ளிட்டவை வீட்டுக்கே வரும்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும்

ஏழைப் பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம், ஒரு பட்டுப் புடவை கொடுக்கப்படும்..

6 முதல் 12ம் வகுப்பு வரை உயர்தர 100 காமராஜர் சிறப்பு பள்ளிகள் திறக்கப்படும்

மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.