“கிரிக்கெட் உலகிற்குப் பேரிடி..! மாட்டியது பெரிய தலை..?” – – ஆர்சிபி மேட்ச் டிக்கெட் ₹19,000-க்கு விற்பனை…. பெங்களூருவில் அவிழ்ந்த மிகப்பெரிய கள்ளச்சந்தை மர்மம்..!!
SeithiSolai Tamil April 17, 2026 10:48 PM

சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட்டுகளைக் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்ற விவகாரத்தில், மைதான கேன்டீன் ஊழியர் சந்திரசேகர் என்பவரைப் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

ஏப்ரல் 15 அன்று நடைபெற்ற ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, சுமார் 180-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்து, ஒரு டிக்கெட்டை 15,000 முதல் 19,000 ரூபாய் வரை விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இதற்காகச் சில தனியார் நிறுவனங்களின் பெயர்களில் ஆன்லைன் தளம் மூலம் மொத்தமாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, பின்னர் அவற்றை அதிக விலைக்குத் திசைமாற்றியது தெரியவந்துள்ளது.

இந்த முறைகேட்டின் பின்னணியில் கே.எஸ்.சி.ஏ (KSCA) உறுப்பினர் கணேஷ் பரீக்ஷித் என்பவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கைதான சந்திரசேகர் வாக்குமூலம் அளித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் டிக்கெட் விற்பனையில் நிலவும் மிகப்பெரிய கள்ளச்சந்தை வலையமைப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 17.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் இவ்வாறு முறைகேடாக விற்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தலைமறைவாக உள்ள கணேஷ் பரீக்ஷித்தை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், இந்தச் சட்டவிரோத விற்பனைக்கு உடந்தையாக இருந்த தனியார் நிறுவனங்களின் இயக்குநர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.