நான் ஹேப்பி.. ஆனா மனசு… ஜிம்மில் திரிஷா வெளியிட்ட வீடியோ
CineReporters Tamil April 18, 2026 12:48 PM

தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகைஅக்ளில் திரிஷா ஒருவர். 2000ம் ஆண்டில் வந்த திரிஷா இன்றுவரை ஹீரோயினாகவே தனது இடத்தை தக்கவைத்துள்ளார். பொதுவாக திரிஷா அதிக கிசுகிசுக்களில் சிக்காதவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவ்ர். ஆனால் விஜய் சங்கீதா விவாகரத்து விவகரம் வெளியானதிலிருந்தே திருஷாவின் பெயரும் கூடவே பயணிக்கிறது. கில்லி படம் தொடங்கி சமீபத்திய லியோ படம் வரை விஜய்க்கு மிக நெருக்கமான தோழியாகவும், திரையுலகில் சிறந்த ஜோடியாகவும் வலம் வருபவர் திரிஷா. இதை மட்டுமே வைத்துக்கொண்டு, இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும், அதனால் தான் திரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் பரப்பப்பட்டன.

இதில் உச்சகட்டமாக, திரிஷா விரைவில் திரையுலகை விட்டு முழுமையாக விலகப் போகிறார் என்ற தகவல் சில நாட்களுக்கு முன் வேகமாகப் பரவியது. பிரபல சினிமா விமர்சகர்கள் மற்றும் யூடியூபர்கள் சிலர், ‘திரிஷா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளதால், இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று கூறி வந்தனர். இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன், பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டேன், நான்கு குழந்தைகளுக்கு தாயாகிவிட்டேன்! இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா? உங்கள் கற்பனை கதை கோட்டா முடிந்துவிட்டதா? என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் திரிஷா தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை போஸ்ட் செய்திருக்கிறார். அந்த வீடியோவில், ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. ஆனால் எனது உள்ளம் அப்படி இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். திரிஷாவின் இந்த வருத்தத்திற்கு என்ன காரணம் என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.