தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அவர், தமிழக அரசு பெண்களுக்காகச் செய்த நிதி உதவிகளைப் பட்டியலிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ”கடந்த பிப்ரவரி 24-ம் தேதி காலையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பெண்களின் வங்கி கணக்கில் ₹5,000 செலுத்தப்பட்டது.
அதற்கு முன்பே ஜனவரியில் மகளிர் உரிமைத் தொகை ₹1,000, பொங்கல் பரிசுத் தொகை ₹3,000 மற்றும் பிப்ரவரி மாத உரிமைத் தொகை ₹1,000 என கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மொத்தமாக ₹10,000 வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவிகளை மறந்துவிடாதீர்கள்” என்று அமைச்சர் அதிரடியாகப் பேசினார். அமைச்சரின் இந்த ‘பணக் கணக்கு’ பிரசாரம் தற்போது பெண்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும், சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்-யையும் பெற்றுள்ளது.