GT vs RCB: ``எதிர்பார்த்ததை விட விக்கெட்டுகள் அதிகமாகவே விழுந்தன, ஆனாலும்..."- கேப்டன் சுப்மன் கில்
Vikatan May 01, 2026 02:48 PM

ஐபில் தொடரில் நேற்று (ஏப்ரல்-30) நடைபெற்ற பெங்களூரு vs குஜராத் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 155 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, அதை விரட்டி களமிறங்கிய குஜராத் அணியினர் அடுத்தடுத்து விக்கெட்களை விட்டாலும் 15.5 ஓவர்களில் 156 என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்றுள்ளது. 'பிளே ஆஃப் ரேசில் நாங்களும் இருக்கோம்' என தொடர்கிறது குஜராத் அணி.

GT vs RCB

வெற்றிக்கு பின்னர் பேசிய அணியின் கேப்டன் சுப்மன் கில், ``மிகவும் திருப்திகரமாக இருக்கிறது. இந்த மாதிரியான ஒரு பிட்ச்சில், ஆர்சிபி போன்ற ஒரு அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்களது பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல். இன்றைய வெற்றிக்கு எங்களது ஃபீல்டிங் ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

சில போட்டிகளில் நாங்கள் சரியாக ஃபீல்டிங் செய்யவில்லை. ஆனால் இன்று அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டோம். மைதானத்தில் இருந்த அந்த எனர்ஜி மிகவும் நன்றாக இருந்தது.

குறிப்பாக இரண்டாவது ஓவருக்குப் பிறகு, விராட் பாய் ரன்கள் சேர்த்தபோது, நாங்கள் மீண்டும் எப்படி ஒன்று திரண்டோம் என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. பவர் பிளேயில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்று திட்டம் ஏதும் இல்லை. நான் ஆட்டத்தின் போக்கிலேயே இருந்தேன்.

முதல் பந்திலேயே எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. இரண்டாவது பந்து எனக்கு சாதகமாக அமைந்ததும், இன்று எனது நாள் என்று எனக்குத் தோன்றியது. நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தேன்.

GT vs RCB

அதனால் பந்துவீச்சாளர்களைத் அடித்து ஆட நினைத்தேன். ராகுல் தெவாடியா எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். நாங்கள் எதிர்பார்த்ததை விட ஓரிரு விக்கெட்டுகள் அதிகமாகவே விழுந்துவிட்டன. ஆனாலும் இறுதியில் அவர் ரன்கள் சேர்த்தார். போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி." என்றார்.

IPL : "5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஐபிஎல் வேறு, இப்போது இருக்கும் ஐபிஎல் வேறு"- SRH கேப்டன் கம்மின்ஸ்
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.