மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரியின் உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஆர்.பி செளத்ரி காரில் சென்றபோது அவரது கார் லாரியுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஆர் பி செளத்ரியின் உடல் சென்னைக்கு இன்று கொண்டுவரப்பட்டு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆர்.பி செளத்ரிக்கு ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் ஆர்.பி சவுத்ரியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜய் நடிகராக இருந்த போது தொடர் தோல்வி படங்களை சந்தித்த போது பூவே உனக்காக படத்தின் மெகாஹிட்டை ஆர்.பி சவுத்ரி கொடுத்தார்,
#WATCH | Chennai, Tamil Nadu: TVK chief and actor Vijay arrives at the residence of veteran film producer R.B. Choudary to pay him his last respects.
— ANI (@ANI) May 6, 2026
R.B. Choudary died in a road accident in Beawar, Rajasthan, yesterday. pic.twitter.com/TbbOf4Z7k3
மேலும் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100வது படத்தை விஜயை வைத்துத்தான் தயாரிக்க வேண்டும் என்கிற ஆசை தனக்கு இருப்பதாக ஆர்.பி சவுத்ரி தெரிவித்துள்ளார்.