118 பேர் ஆதரவு இல்லை!.. விஜய் பதவியேற்பதில் சிக்கல்!.. நடப்பது என்ன?...
Webdunia Tamil May 06, 2026 10:48 PM


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 34.92 சதவீத வாக்குகளை பெற்றதோடு 108 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தவெக தலைவர் விஜய் தமிழக பொறுப்பு ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.

மேலும், இன்று மதியம் 3.30 மணி அளவில் விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக ஆளுநரையும் சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கடிதமும் கொடுத்தார். ஆட்சி அமைக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் தங்களுக்கு எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் விஜய் வாய் மொழியாக மட்டுமே கூறியதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், போதுமான ஆதரவை தவெக காட்டாத காரணத்தால் ஆளுநருக்கு திருப்தி இல்லை இல்லை என செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதையடுத்து விஜய் நாளை முதல்வராக பதவி ஏற்பதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது. 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை விஜய் கொடுத்த பின்னரே ஆளுநர் விஜய்க்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார் எனத் தெரிகிறது..

ஏற்கனவே காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களை கொடுத்து விட்ட நிலையில், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவை கேட்டிருக்கிறார் விஜய். அவர்களும் ஆதரவு கொடுத்த பின்னரே விஜய் முதல்வராக பதவி ஏற்க முடியும் என சொல்லப்படுகிறது..
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.