கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த் , சனந்த் , கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் டோரோதி. இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டாவது பாடலாக முத்துமணி பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இளையராஜா பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஸ்வேதா மோகன் இளையராஜா இணைந்து இந்த பாடலை பாடியுள்ளார்கள். முத்துமணி பாடல் வரிகள் இதோ
முத்து மணிச்சரம்
கோக்கணும்-கோக்கணும்
மாலையை சூடணும்
தங்கத்துக்கு
கோரஸ்
முத்து மணிச்சரம் கோக்கணும்-கோக்கணும்
மாலையை சூடணும் தங்கத்துக்கு
மஞ்சலு, குங்குமம், சந்தனம் வளைச்சு
பூசணும்-பூசணும் பொன்மணிக்கு
(பொன்மணிக்கு, பொன்மணிக்கு, பொன்மணிக்கு, பொன்மணிக்கு)
மண்ணிலுள்ள தாய்களுக்கெல்லாம் ஒரு மகளாகப் பிறந்தவளே
நம் குலம்தான் உலக உயிரை காக்குமடி
தவிப்பவரின் துயரையெல்லாம் போக்குமடி
அங்க வானத்தில் மின்னிடும் தாரகை போலிங்கு வந்தவளே!
மண்ணிலுள்ள தாய்களுக்கெல்லாம் ஒரு மகளாகப் பிறந்தவளே
முத்து மணிச்சரம் கோக்கணும்-கோக்கணும்
மாலையை சூடணும் தங்கத்துக்கு
மஞ்சலு, குங்குமம், சந்தனம் வளைச்சு
பூசணும்-பூசணும் பொன்மணிக்கு
முத்து மணிச்சரம்
(தந்தன-தாத்தன)
மாலையை சூடணும்
(தந்தன-தாத்தன)
மஞ்சலு, குங்குமம், சந்-
(தந்தன-தாத்தன)
பூசணும்-பூசணும்
(தததத-நா)
கோரஸ்
முத்து மணிச்சரம் கோக்கணும்-கோக்கணும்
மாலையை சூடணும் தங்கத்துக்கு
(பொன்மணிக்கு, பொன்மணிக்கு, பொன்மணிக்கு, பொன்மணிக்கு)
வனக்கிளியே!
உன்னைக் காணாத நாளிங்கு நாளில்லையே (நாளில்லையே)
பொன்மயிலே!
நீ இல்லாமல் பொழுதிங்கு நகரலியே (நகரலியே)
அக்கம், பக்கம் போனபோது உன்ன பார்த்தவன் நா
பக்கம்-பக்கம் இருந்தபோது உன்ன பார்க்கலியே
அருகிருந்த போதும் நான் வெகு தூரத்திலே
தேடுகிற போது என் நெஞ்சு பாரத்திலே
முத்துமணி, பவளமணி மாலைகளைச் சூடி
மின்னும் பொன்னு வைரக்கிரீடம்
சிரசில் தகதகவென ஜொலிக்கும்
மாதங்கி, மரகதமணி, மீனாட்சி நீதாண்டி!
மீனாட்சி நீதாண்டி!
ஒரு வழிப்பாதையில் தனியா நா
தவிச்சு-தவிச்சு மனம் துடிக்கணுமா?
ஒரு வழிப்பாதையில் தனியா நா
தவிச்சு-தவிச்சு மனம் துடிக்கணுமா?
வாடி, மீனாட்சி!
வழி துணையா, காமாட்சி!