சர்தார் 2 முதல் மீசைய முறுக்கு 2 வரை...செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்
ராகேஷ் தாரா September 01, 2026 04:44 PM

செப்டம்பர் மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான ஜானர்களில் உருவாகியுள்ள பல படங்களை வழங்க உள்ளது. ஹாரர், ஸ்பை த்ரில்லர், ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன், மிஸ்டரி டிராமா, மியூசிக்கல் என வெவ்வேறு களங்களில் உருவாகியுள்ள படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வருகின்றன. குறிப்பாக கார்த்தி, சூரி, கீர்த்தி சுரேஷ், ஜி.வி. பிரகாஷ் குமார், ஹிப்ஹாப் தமிழா ஆதி என முன்னணி நடிகர்கள் இடம்பெறும் படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

செப்டம்பர் மாதம் வெளியாகும் படங்கள் 

இம்மார்டல்: ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாது லோஹர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளஇம்மார்டல்திரைப்படம் செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியுள்ள இப்படம் ரொமான்டிக் ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளது. மர்மமான ஒரு வீட்டில் தொடங்கும் காதல் கதை, பின்னர் அமானுஷ்ய சம்பவங்களை நோக்கி நகர்வதாக டிரெய்லர் காட்டுகிறது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளதும் ஜி.வி. பிரகாஷ் குமாரே என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்தார் 2: கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும்சர்தார் 2’ செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ராஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் IVY என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை விட பிரம்மாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஸ்பை பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக டீசர் மற்றும் டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.

டிமான்டி காலனி 3: அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளடிமான்டி காலனி 3’ செப்டம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது. அஜய் ஞானமுத்து எழுதி இயக்கும் இந்த மூன்றாம் பாகத்தில் முந்தைய படங்களுடன் தொடர்புடைய கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன. மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன், குரு சோமசுந்தரம் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பாஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, RDC மீடியா மற்றும் ஞானமுத்து பட்டறை இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

மண்டாடி: சூரி கதாநாயகனாக நடித்துள்ளமண்டாடிசெப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. ‘செல்ஃபிபடத்தை இயக்கிய மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள இப்படம் கடலோர மக்களின் வாழ்க்கையையும், கடலில் நடைபெறும் படகுப் போட்டியையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. சூரியுடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

டோரதி: கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்டோரதிதிரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கார்த்திக் சுப்பராஜின் 10வது இயக்குநர் படமான இதில் சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகளவில் திரையிடப்பட்ட பின்னர் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.

மீசைய முறுக்கு 2: ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து, எழுதி, இயக்கி, இசையமைத்துள்ளமீசைய முறுக்கு 2’ செப்டம்பர் 25ஆம் தேதி வெளியாகிறது. சைத்த்ரா ஜே. ஆச்சார், கெட்டிகா சர்மா, யோகி பாபு, கருணாஸ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை குஷ்பு சுந்தர் அவ்னி மூவீஸ் சார்பிலும், ஏசிஎஸ் அருண்குமார் பென்ஸ் மீடியா சார்பிலும் தயாரித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு வெளியானமீசைய முறுக்குபடத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பாலாஜி சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்; ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.