ஹாய், ஒன்ஸ் மோர் படங்களை பின்னுக்குத் தள்ளிய ‘மொத ராத்திரி’... சத்தமில்லாமல் வென்ற ஸ்லீப்பர் ஹிட்!
ராகேஷ் தாரா September 02, 2026 06:44 PM

தமிழ் சினிமாவில் பெரிய நட்சத்திரங்களின் படங்களுக்கு மத்தியில், குறைந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து கவனம் பெறும் சிறிய படங்களும் அவ்வப்போது வெற்றியை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போதுமொத ராத்திரிதிரைப்படம் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவான இப்படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. புதுமணத் தம்பதிகளின் முதலிரவை மையமாக வைத்து ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை நகைச்சுவையுடன் சொல்லும் குடும்ப பொழுதுபோக்கு படமாக இது உருவாகியுள்ளது.

ஸ்லீப்பர் ஹிட் அடித்த மொத ராத்திரி

வெளியான முதல் சில நாட்களிலேயே இப்படத்திற்கு எதிர்பார்த்ததைவிட நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, வெளியான மூன்று நாட்களில் சுமார் ரூ.1.8 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருப்பதும், ரசிகர்களின் ஆதரவு காரணமாக வசூல் அதிகரித்து வருவதும் படக்குழுவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் படத்தை பாராட்டி, நகைச்சுவை மற்றும் உணர்வுகள் சரியான அளவில் கலந்த குடும்பப் படமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கவமீர்க்க தவறிய ஹாய் , ஒன்ஸ் மோர் 

இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியானஹாய்திரைப்படத்தில் கவின் மற்றும் நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். விஷ்ணு எடவன் இயக்கிய இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டுள்ளது. முதல் மூன்று நாட்களில் இந்திய அளவில் ரூ.5 கோடியை கடந்த இப்படம், ஐந்தாவது நாளில் ரூ.77 லட்சம் வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நாளில் வெளியானஒன்ஸ் மோர்படத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ள இப்படம், காதலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலை எதிர்கொள்ளும் ஒருவரின் கதையை மையமாகக் கொண்டது. படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், வெளியான நாட்களை கணக்கில் எடுத்துக்கொண்டால்ஹாய்’ 5 நாட்களில் ரூ.7.50 கோடிக்கும் அதிகமாகவும், ‘ஒன்ஸ் மோர்ரூ.2 கோடிக்கும் குறைவாகவும் தமிழகத்தில் வசூல் செய்துள்ள நிலையில், ‘மொத ராத்திரி’ 12 நாட்களில் சுமார் ரூ.4 கோடிக்கும் அதிகமான தமிழக வசூலை பதிவு செய்துள்ளது. பெரிய நட்சத்திர பலம் இல்லாமல் வெளியான இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் தாக்குப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் குறைந்த எதிர்பார்ப்புடன் தொடங்கி ரசிகர்களின் ஆதரவால் வசூலை அதிகரித்துள்ளமொத ராத்திரிஇந்த ஆண்டின் ஸ்லீப்பர் ஹிட்களில் ஒன்றாக கவனம் பெற்றுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.