கத்தி எடுத்துவனுக்கு கத்தி தான் என்பது போல இன்ஸ்டாவால் வந்த ஆட்சி இன்ஸ்டாவால் வீழும் - டிடிவி தினகரன் !
தவெக என்ற பாதக, நாசகார, விஷம சக்தியை ஒழிப்பதற்கு எல்லா சக்திகளும் அவரவர் வழியில் வேலைகளை செய்வார்கள்; தமிழ்நாட்டு மீது அக்கறை உள்ளவர்கள் எல்லோரும் சரியான நேரத்தில் சரியான செயலை செய்வோம் - டிடிவி தினகரன் பேட்டி.
டிடிவி தினகரன்
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் அமமுக நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தவெகவின் 100 நாட்கள். ஆட்சி சினிமா படம் பார்ப்பது போல உள்ளது. எதார்த்தத்திற்கும் ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லை ; இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் இளைஞர்களை கவர்ந்து மாற்றம் என வாக்குறுதிகளை சொல்லி அவர்களே ஆட்சிக்கு வருவோமா என தெரியாமல் வெற்றிபெற்றுள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் தங்களது தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரே தெரியாமல் சினிமா கதாநாயகனை நம்பி வாக்களித்து குடும்பத்தினரை வாக்களிக்க வைத்துள்ளார்கள். தமிழை கூட சரியாக வாசிக்க தெரியாதவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கியுள்ளார்கள். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழை கூட சரியாக பேச தெரியவில்லை இவர்களுக்கு அ ஆ கூட தெரியவில்லையா? இவர்களை தற்குறிகள் என்பது சொல்வது சரிதான்.
விஷமத்தனமான ஒரு எண்ணத்தில் தவெக எம்எல்ஏ அமைச்சர்கள் உள்ளனர்
24 ஆம் புலிகேசி ஆட்சி போல உள்ளது இந்த ஆட்சி; அடிப்படை கணித அறிவு கூட இல்லாமல் பேசுகின்றனர் வருத்தமளிக்கிறது. சினிமாவில் இருந்து MGR , அம்மா வந்தார்கள் ஆனால் அவர்கள் ஆட்சியில் எதாவது இது போன்று குற்றச்சாட்டு இருந்தது. 1969ல் காங்கிரஸ்க்கு மாற்றாக அண்ணா ஆட்சி அமைத்தபோதும், 1979 எம்ஜிஆர் ஆட்சியின்போதும் இளைஞர்கள் பதவியேற்றபோதும் தரமான அரசியல் தலைவர்களாக இருந்தார்கள், அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். படிப்பறிவில் வளர்ந்த தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளது. GENZ தலைமுறைகள் மற்றும் இளைஞர்கள் யாரென்று தெரியாத நபரை தவறான ஆட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். ஆதவ் அர்ஜூனா மில்லி லிட்டர் என சொல்ல தெரியாமல் மில்லி மீட்டர் என்கிறார்கள்; நிதியமைச்சருக்கு தமிழ் பேச தெரியாது என சொன்னால் கிறிஸ்துவ மதம் என நிதியமைச்சர் சொல்கிறார்; மதத்திற்கும் மொழிக்கும் என்ன சம்மந்தம். கன்றோடு சேர்ந்து திங்கும் என்பது போல சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பேசுகிறார்; பலகட்சி நிர்மல்குமார் ஏதோஎதோ பேசுகிறார்; சபாநாயகர் நடுநிலையாக பேசுவதுபோல அமைச்சர்களை தவறான கருத்தை பேசவைத்து நீக்குகிறார். விவசாயிகள் தண்ணீர் காலம்தாழ்த்தி திறப்பதாக வருத்தத்தில் உள்ளனர். ஆனால் நேற்று காலை தொடங்கி வீடு திரும்பும்வரை சூட்டிங் போல சென்றுவந்துள்ளார். அவரே எதிர்பார்க்காதது நடந்துவிட்டது் தேர்தல் வாக்குறுதியாக எதோஎதோ அடித்துவிட்டார் மாட்டிக்கிட்டார்; மாற்றம் வேண்டும் என்ற காரணத்தை சொல்லி இளைஞர்கள் தற்போதைய அரசியலுக்கு எதிராக இருக்கிறார்கள்; இப்போது சினிமா கவர்ச்சியை நம்பிதான் இந்த ஆட்சியை கொண்டுவந்திருக்கிறார்கள். விஜயை வெற்றிபெற வைத்தது நியாயம், ஆனால் அவர்களது வேட்பாளர்களை எப்படி வெற்றி பெற வைத்தார்கள்; 100 நாட்கள் முதலமைச்சர் மௌனவிரதம் இருக்கிறார்; அமைச்சர்கள் , MLAக்கள் எல்லோருக்குமே 4 ஆம் வகுப்பு மாணவனுக்கு உள்ள அடிப்படை. கணிணி அறிவு இல்லை; விஷமத்தனமான ஒரு எண்ணத்தில் தவெக எம்எல்ஏ அமைச்சர்கள் உள்ளனர். விஜயால் எழுதிவைக்காமல் பேச முடியுமா என தெரியவில்லை; தவெக அமைச்சர் எம்எல்ஏ தற்குறிகள் மீது வருத்தம் இல்லை வாக்களித்த மக்களை நினைத்து தான் வருத்தம். மோசமான ஆட்சி களப்பிரர்கள் ஆட்சி போன்ற இருண்ட ஆட்சி , தமிழ்மொழியை சொல்லி கொடுத்தாலும் வராது , அடிப்படை தமிழ் அறிவே வராது
விஜய் பிரதமர் என அமைச்சர் சொல்வது குறித்த கேள்விக்கு?
டெல்லியில் தற்குறி பாராளுமன்றமாக மாறிவிடும் தவெகவைவதற்குறி விஜய் கழகம் என வைக்கலாம்; இவர்களை விமர்சிப்பதே நமக்கு அசிங்கமாக உள்ளது இதற்கு ஒரு முடிவு விரைவாக வரும். சோனியாகாந்தி திமுகவுடன் கூட்டணி வைத்தார்கள், நான் டெல்லி சென்றபோது விஜயுடன் கூட்டணி போங்கள் நாங்களும் வந்துவிடுவோம் என என என்னிடம் காங்கிரஸ் முக்கிய பிரமுகர் பேசினர். விஜய் விசமத்தனமானவர், விஜயை சேர்ந்தவர்கள் வடமாநிலத்தவர்களை ஏமாற்றுகின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சியை விட போதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. லஞ்சம் ஊழல் குறையவில்லை. இளைஞர்கள் தங்கள் தலையிலையிலையே கொள்ளிக்கட்டையை வைத்துள்ளனர்;தமிழகத்தை வீழ்த்த வந்த சக்திக்கு வாக்களித்துள்ளனர். விஜய் பத்திரிக்கையாளர்களை சந்திக்காதது strategy தான்; தற்குறி
விஜய் கழகம் என்பது Unparliment வார்த்தை கிடையாது. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளோம்; நான் என்றும் அவசரபட மாட்டேன்; இலவுகாத்த கிளி போல காத்திருக்கமாட்டேன்
தொந்தரவே தாங்க முடியவில்லை
தற்போது எம்எல்ஏ தொந்தரவே தாங்க முடியவில்லை இதில் உள்ளாட்சியில் அவர்கள் வந்தால் என்ன ஆகும்.
தவெக - அதிமுக என எப்படி சொல்ல முடியும் பதவி ஆசை உள்ளவர்களை சேர்த்துவைத்துகொண்டு மக்களுக்கு துரோகம் செய்துள்ளனர். இவர்கள் விஷமத்தனமானவர்கள், விஷமிகள் என ஆதவ் அர்ஜூனா குறித்த கேள்விக்கு பதிலளித்தார். கத்தி எடுத்தவருக்கு கத்தி தான் வீழும் என்பது போல இன்ஸ்டாகிராமால் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்ஸ்டாகிராமால் வீழ்வார்கள். இது ஆகாவழி ஆட்சியாக ஏட்டுச்சுரைக்காயாக உள்ளது நிழலை பார்த்து வாக்களித்து ஏமாற்றமடைந்துள்ளனர்" என்றார்.