கேப்சூல் கார் தெரியுமா? டயர், ஸ்டியரிங் இல்லாமல் இயங்கும் எதிர்கால எலெட்ரிக் கார் இதுதான்!
GH News July 15, 2024 01:07 AM

சூரத்தைச் சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் எதிர்கால எலக்ட்ரிக் கேப்சூல் காரை உருவாக்கியுள்ளனர். இந்தக் காரில் உள்ள ஸ்பெஷாலிட்ட என்ன தெரியுமா? இந்தக் காரை டயர், ஸ்டீயரிங் இல்லாமல் கேமிங் ஜாய்ஸ்டிக்ஸ் மற்றும் மொபைலை பயன்படுத்தியே இயக்கலாம்!

காரின் கேப்சூல் வடிவமைப்பு மற்ற வாகனங்களில் இருந்து இதை வேறுபடுத்துகிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த சிவம் மவுரியா, சங்கம் மிஸ்ரா மற்றும் தல்ஜித் ஆகிய 3 பொறியியல் மாணவர்கள் இதனை உருவாக்கியுள்ளனர்.

வெறும் மூன்றரை மாதங்களில் இந்தக் காரை ஓட்டுவதற்குத் தயாராக உருவாக்கிவிட்டனர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 80 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம். மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

முழுக்க முழுக்க மின்சாரத்தில் செயல்படும் எலக்ட்ரிக் காரான இதன் விலை 65,000 ரூபாய். வருங்காலத் தலைமுறைக்காக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதைக் கருத்தில் இந்தக் காரை சூரத் மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதன் வடிவமைப்பில் மற்ற கார்களைப் போல ஸ்டீயரிங் கிடையாது. ஸ்டீயரிங் இல்லாமல் இந்த கார் எப்படி ஓட்டும்? அதற்குப் பதிலாக கேமிங் ஜாய்ஸ்டிக் மற்றும் மொபைல் போனை பயன்படுத்தலாம்! எதிர்காலத்தில் இந்தக் காரை செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இயங்க வைக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

கேப்சூல் வடிவமைப்பு கொண்டிருப்பதால் இந்த வாகனத்தில் டயர்களே இல்லை. இந்த கார் 4-6 அடி நீளம் கொண்டது. இப்போதைக்கு இந்தக் காரில் ஒரு டிரைவர் மட்டுமே அமர முடியும்.

மாணவர்கள் இதைத் தயாரிக்க அதிகம் செலவு செய்யவில்லை. அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்கியுள்ளனர். அவை தவிர பெரும்பாலான மூலப்பொருட்களை பழைய உதிரி பாகங்களை விற்பவர்களிடம் இருந்து வாங்கியுள்ளனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.