TN Electricity Bill: ஆகஸ்ட் மாதத்தில் அன்றாட வாழ்வில் ஏற்படும் மாற்றம்: சிலிண்டர் விலை முதல் மின் கட்டணம் வரை...
செல்வகுமார் August 27, 2024 05:38 PM

ஆகஸ்ட் மாதத்தில், நம் அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளில் ஏற்படும் 6 மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

சிலிண்டர் விலை உயர்வு:

 

சிலிண்டர் விலை உயர்கிறதா என அச்சப்பட வேண்டாம், ஏனென்றால் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயரவில்லை, உயர்வது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையாகும். அதாவது 7 ரூபாய் 50 காசுகள் உயர்கிறது. இதனால், கடைகளில் குறிப்பாக உணவகங்களில் விலையானது, உயர வாய்ப்பிருக்கும்

 

எச்டிஎஃப்சி வங்கி:

 

எச்.டி.எஃப்.சி வங்கி பயனரின் கிரெடிட் கார்டுகளுக்கான நிலுவைத் தொகையை தாமதமாக செலுத்துவதற்கான கட்டணங்கள் ரூ.100 முதல் ரூ.1300 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை:

 

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் உயர்கல்வி பயில்வோர்களுக்கு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் மாதம் ரூ. 1000 அரசு வழங்க உள்ளது. இந்த உதவித் தொகையானது 3.28 லட்சம் மக்களுக்கு கிடைக்கும்

 

மின்கட்டண உயர்வு:

 

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால், பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றமடையும்

 

ரேஷன் கார்டு:

 

புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களில் சுமார் 2 லட்சம் பேருக்கு , இந்த மாதம் ரேஷன் கார்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

 

ஃபாஸ்ட் டேக் கார்டு:

 

பாஸ்ட் டேக் கார்டுடன் வாகன எண் மற்றும் சேஸ் எண்ணை இணைக்க வேண்டும். புதிதாக கார் வாங்கியிருந்தால், 90 நாட்களுக்குள் ஃபாஸ்ட் டேக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் எனவும், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஃபாஸ்ட் டேக் வழங்கப்பட்டதாக இருந்தால், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.